உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாசில்தார் சிவக்குமார், 41. இவருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு முத்தம்பட்டி ஏரியில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அங்கு அனுமதியின்றி டிராக்டரில் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், டிராக்டரை பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் சிவக்குமார் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை