உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சர்வீஸ் சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

சர்வீஸ் சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

சூளகிரி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கால்நடை தீவனம் ஏற்றிய லாரி, சேலம் நோக்கி நேற்று மாலை சென்றது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த சுண்டகிரியில், உயர்மட்ட மேம்பாலம் வேலை நடக்கும் இடத்திலுள்ள சர்வீஸ் சாலையில் மாலை, 4:00 மணிக்கு லாரி சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதனால், 5 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி