உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பத்திர பதிவுக்கு விதித்த தடையை நீக்க கோரி கிராம மக்கள் மனு

பத்திர பதிவுக்கு விதித்த தடையை நீக்க கோரி கிராம மக்கள் மனு

தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் சதீஸிடம், செட்டிக்கரை கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தர்மபுரி தாலுகா, செட்டிக்கரை கிராமத்தில், 160 குடும்பத்தினர், 103.50 ஏக்கர் நிலத்தை கடந்த, 4 தலைமுறைகளுக்கு மேலாக, விலைக்கு வாங்கி அனுபவித்து வருகிறோம். 'அ' பதிவேடு ஆவணங்களின் அடிப்படையில் அவற்றிற்கு பட்டாவும் உள்ளது. இந்நிலையில், செட்டிக்கரையை சேர்ந்த ஒருவர், அரை ஏக்கர் நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்தார். அதை கடந்த மே, 29ல் கிரயம் செய்ய சென்றபோது, செட்டிக்கரை கிராமத்தில், 103.50 ஏக்கர் நிலம், 'வக்ப்' வாரிய சொத்து எனக்கூறி, தர்மபுரி இணை சார்பதிவாளர் அலுவலர், பத்திர பதிவிற்கு தடை விதித்துள்ளார். இதனால், கிரயம் செய்ய முடியவில்லை. 'வக்ப்' வாரிய சொத்துக்கள் குறித்து முறையான அறிவிப்பு வழங்கவில்லை. மாவட்ட பதிவாளரை அணுகியபோது, தனக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டார். வருவாய்த்துறையும் எங்களுக்கு எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது எங்களது வாழ்வாதார பிரச்னை என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு பத்திர பதிவிற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை