உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை மனு

அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை மனு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் அடுத்த தளவாய்ஹள்ளி கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:இண்டூர் அடுத்த தளவாய்ஹள்ளியில், அரசு கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்த, 2 ஏக்கர் நிலம் ஏற்கனவே மீட்கப்பட்டது. மீதமுள்ள, 65 சென்ட் நிலத்தை மீட்கக்கோரி, கிராம மக்கள் சார்பில், பலமுறை மனு அளிக்கப்பட்டது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, கிராமத்தின் பொது சுடுகாடு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.கிராம மக்களுடன், தர்மபுரி, பா.ம.க., -- எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரனும் சேர்ந்து, அதிகாரிகளிடம் மனு அளித்து, அரசு புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை