கிருஷ்ணகிரி நகர தி.மு.க., சார்பில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., சார்பில்ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகிருஷ்ணகிரி, டிச. 22-கிருஷ்ணகிரி நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கம், தினசரி காய்கறி சந்தை கடைகள் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பணிகளை, நேற்று நகராட்சித்துறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் புதுப்பிக்கப்பட்ட அண்ணாதுரை சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பரிதா நவாப் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, 147 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி கலந்து கொண்டு, 1,048 பேருக்கு, தையல் இயந்திரம், சலவைப்பெட்டி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும், வளர்ச்சி நிதியாக, 5 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை அமைச்சர் நேருவிடம், நகர செயலாளர் நவாப் வழங்கினார். மொத்தம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர தி.மு.க., சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள், தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், கிருஷ்ணகிரி நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி, வட்ட செயலாளர் அமீர் சுஹேல், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.