வன உயிரின பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு
பென்னாகரம்: ஒகேனக்கல்லில் நடந்த வன உயிரின வார விழாவிற்கு ஒகே-னக்கல் ரேஞ்சர் ராஜ்குமார், பென்னாகரம் ரேஞ்சர் பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மரங்கள் வளர்ப்பது, வனப்பகுதியில் பெருக்குவது, வன பகுதியில் புகை பிடித்தல் கூடாது, வனத்-தீயை தடுப்பது, வன வளத்தை பெருக்குவது, பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள் பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்-படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் உள்ள வனத்துறையின் தங்கும் விடுதி வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டனர். இதில் வனவர் சக்திவேல், வனக்காப்பா-ளர்கள் ராமஜெயம், மதன்குமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏரா-ளமான வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.