தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:பி.ஐ.சி.எம்.இ., இணையதளத்தின் மூலம், தேவைப்படும் விப-ரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, சுயமாக கர்ப்பி-ணிகள், 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண் பெற்று கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்பின், தங்களின் இந்த கர்ப்பத்தை இணையதளத்தில் சுயமாக பதிவு செய்து கொள்ளலாம்.குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவு மற்றும் மகப்பேறு நிதியு-தவி பெற, கர்ப்ப பதிவு எண் அவசியம். கர்ப்பத்தை பதிவு செய்ய கர்ப்பிணியின் ஆதாருடன் இணைக்கப்-பட்ட தொலைபேசி எண், கர்ப்பிணியின் ஆதார் எண், கணவரின் பெயர், தொலைபேசி எண், திருமணமான தேதி, கர்ப்பத்தை உறுதி செய்ததற்கான மருத்துவ ஆவணங்கள், கடைசி மாத-விடாய் தேதி, முந்தைய கர்ப்பம், முந்தைய பிரசவம், முந்தைய கருக்கலைப்பு இருப்பின் விபரங்கள், இந்த கர்ப்பத்திற்கு முன், உயிருடன் இருக்கும் குழந்தையின் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பெயர், இடம், பிரசவம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஊர் உள்-ளிட்ட விபரங்களுடன், https://picme.tn.gov.in//என்ற இணையத-ளத்தில் சுய கர்ப்ப பதிவு செய்யலாம்.இது தவிர, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 51 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சுய கர்ப்ப பதிவு சிறப்பு முகாம் நடந்து வருகி-றது. இதை மாவட்டத்திலுள்ள பதிவு மேற்கொள்ளாத மற்றும் பி.ஐ.சி.எம்.இ., பதிவு எண் பெறாத அனைத்து கர்ப்பிணிகளும் பயனடையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.