உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொதிக்கும் சாம்பாரில் விழுந்த தொழிலாளி சாவு

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த தொழிலாளி சாவு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளநொனங்குனுாரை சேர்ந்தவர் பலராமன், 58. கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 7ல் அப் பகுதியில் நடந்த உறவினரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு சமையல் நடந்த இடத்தில் சேரில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த பலராமன், கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்தார். தீக்காயம் அடைந்தவரை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பலராமன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை