உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு சிறை

சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு சிறை

தர்மபுரி, போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன், 50. இவர் கடந்த, 2023 ஜூலை, 22 அன்று அதே பகுதியில், தனது பாட்டியுடன் வசித்து வந்த, 10 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து, சிறுமி தனது குடும்பத்தினரிடம் கூறினார். பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் விசாரணை செய்து போக்சோ வழக்கில் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், குற்றச்சாட்டு உறுதியானதால் வெங்கடேசனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை