உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உலக மழைக்காடுகள் தின விழா

உலக மழைக்காடுகள் தின விழா

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த ஆரல்குந்தி கிராமத்தில், உலக மழைக்காடுகள் தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு இல-வச மரக்கன்றுகள் வழங்கும் விழா, சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் நேற்று நடந்தது. நிகழ்ச்-சிக்கு, ஆரல்குந்தி ஊர் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார்.மேச்சேரி தனியார் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நாகராஜ் வரவேற்றார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை-யாசிரியர் பழனி பேசியதாவது:''இன்றைய சூழலில் இயற்கையை பாதுகாப்பது, நம் கடமையாக உள்ளது. மனிதனுக்கும் மரத்திற்கும் பன்னெடுங்காலமாக நெருங்கிய தொடர்பு உள்ளது. மரத்தை நண்பனாக நேசிக்க வேண்டும். உயிர்களின் வாழ்வாதாரம் இயற்கையில் உள்ள-டங்கி இருக்கிறது. நீர்வளத்தை மேம்படுத்தும் மரங்களை நட வேண்டும். குறிப்பாக பனைமரம் அவசியமானதாக இருக்க வேண்டும். பனை மரங்கள் இருக்கும் இடத்தில், நீர் வளம் மேலோங்கி இருக்கும். நம் எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைக்கும் சொத்து இயற்கை மட்டுமே,'' என்றார். இதில், ஊர்பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமானோர் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ