உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு

தர்மபுரி: தர்மபுரி, கோட்டை பரவாசுதேவ சுவாமி கோவிலில் நேற்று காலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், பரவாசுதேவ உற்சவர், சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் வலம் வந்தார். பின், கோவில் மண்டபத்தில் உற்சவரை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், மணியம்பாடி, செட்டிக்கை, பழைய தர்மபுரி வரத-குப்பம், அதகபாடி, மூக்கனுார், புலிக்கரை உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க-வாசல் திறக்கப்பட்டது.* அரூரில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரசுராமன் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதி-காலை, 5:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நுாற்றுக்க-ணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்-துடன் கோவிந்தா, கோவிந்தா என, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.அதேபோல், அரூர் பழைய பேட்டை கரியபெருமாள் கோவில், கடைவீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், மொரப்பூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. * பென்னாகரம் அடுத்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடந்தது. சொர்க்க-வாசல் வழியாக, சுவாமியை அழைத்து வந்தனர். பின்னர், கோவில் கிரிவலப்பாதையில் சுவாமியை சிறப்பு அலங்காரத்தில் எடுத்து வந்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சுற்று-வட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை