உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜவுளிக் கடைகளில் திருடும் பெண்கள்

ஜவுளிக் கடைகளில் திருடும் பெண்கள்

திண்டுக்கல் : ஜவுளிக் கடைகளில் திருடும் பெண்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி நேரத்தில் ஜவுளி, நகைக் கடைகளில் புகுந்து, சில பெண்கள் திருடுவர். போலீசாரும் எளிதில் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்பெண்களை பிடிப்பதற்கு, இன்ஸ்பெக்டர் அனார்கலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். * திண்டுக்கல் சாமியார் தோட்டத்தை சேர்ந்தவர் சுசீலாராணி, 36. இவர், சின்னாளபட்டியில் ஜவுளி கடை வைத்துள்ளார். இந்த கடையில் 12 சுங்கடி சேலைகளை திருடிய, தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த வசந்தி, 25, உத்தமபாளையம் சின்னத்தாய், 55, ஆகியோரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை