உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்ட சிலம்ப போட்டி

மாவட்ட சிலம்ப போட்டி

நத்தம் : நத்தம் அருகே அய்யனார்புரத்தில் உள்ள சர்வசேவா ஸ்பேரோஸ் நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதற்கு பள்ளி முதல்வர் சண்முககுமார் தலைமை வகித்தார். பள்ளி செயலர் வசந்தா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளரும் சிலம்ப மாஸ்டருமான சங்கர் வரவேற்றார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ