உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருட்டு சாயப்பட்டறைக்கு "சீல்

திருட்டு சாயப்பட்டறைக்கு "சீல்

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு இன்னாசிபுரம் அருகே குடகனாற்று கரையில் திருட்டுத்தனமாக இயங்கிய சாயப்பட்டறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.சத்திரபட்டியை சேர்ந்த வேலுச்சாமி தோட்டத்தில், திருப்பூரை சேர்ந்த துரைச்சாமி என்பவர், சாயப்பட்டறை இயக்கி வந்தார். இதன் கழிவுகள் அருகில் உள்ள குடகனாற்றில் கலப்பாதால், விவசாயிகள், கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதன்படி ஆர்.டி.ஓ., பெருமாள், தாசில்தார் செல்வராஜ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., செந்தில் குமார், நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து 'சீல்' வைக்க உத்தரவிட்டனர்.சாயப்பட்டறையின் கழிவு நீர் குழாய் மூலம், குடகனாற்றில் விடப்பட்டது. இதனால் ஆற்றுநீர் மாசுபடுவதோடு, விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. அருகில் உள்ள விவசாய கிணறுகளிலும் நீரின் தன்மை மாறி, உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.டி.ஓ., தாசில்தார் கூறியது: சாயப்பட்டறை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அகற்றுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்பும் அகற்றப்படாவிட்டால் 'சீல்' வைக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை