உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யோகா, சிலம்பத்தில் சாதித்த அக் ஷயா பள்ளி

யோகா, சிலம்பத்தில் சாதித்த அக் ஷயா பள்ளி

ஒட்டன்சத்திரம் : மதுரை சகோதயா பள்ளிகளின் சார்பில் நடந்த யோகா, சிலம்பம், கராத்தே போட்டியில் 12 வயது உட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா சி.பி.எஸ்.இ., பள்ளி நான்காம் வகுப்பை சேர்ந்த ஆர்.தியாஷினி முதலிடம், மூன்றாம் வகுப்பை சேர்ந்த எஸ்.சபரீஷ் மலையாளம் இரண்டாம் இடம், 14 வயது பிரிவில் ஏழாம் வகுப்பை சேர்ந்த ஜி.கங்காவர்ஷினி இரண்டாம் இடம், கே.கே.தக் ஷின் முகுந்தன் மூன்றாம் இடம், 17 வயது பிரிவில் எட்டாம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.சர்வேஷ் முதலிடம் பெற்றார்.12 வயது உட்பட்டோருக்கான யோகா போட்டியில் ஆர்.மித்ரா இரண்டாம் இடம் ,17 வயதிற்குட்பட்டோருக்கான கராத்தே (கட்டா பிரிவில்) 11 ம் வகுப்பை சேர்ந்த எஸ்.வி. சஸ்விதா முதல் இடம், கராத்தே (குமிட்டி பிரிவில்) ஏ.எஸ்.சக்திகமல், என்.ரேவந்த்குமார் இரண்டாம் இடம் பெற்றனர். 19 வயது கராத்தே (குமிட்டி பிரிவில்) 11 ம் வகுப்பைச் சேர்ந்த டி.மிர்னாளினி முதலிடம், கட்டா பிரிவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தரம்மாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ