உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பங்குனி உத்திர திருவிழா: படகில் கண்காணிப்பு

பழநியில் பங்குனி உத்திர திருவிழா: படகில் கண்காணிப்பு

பழநி : பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இங்குள்ள இடும்பன் குளத்தில் படகு மூலம் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று கிரிவீதியில் தேரோட்டம் நடைபெற உள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட பக்தர்கள் அதிகளவில் தீர்த்த காவடியுடன் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவீதியில் அன்னதானம், தண்ணீர் பந்தல் மூலம் நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு மண்டபம் யானைப் பாதை வழியே முருகன் கோயில் சென்று படி பாதை வழியே இறங்கி வர வசதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் இடும்பன் குளத்தில் படகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நிர்வாகமும் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை