புத்துணர்வு கருத்தரங்கம்
சின்னாளபட்டி : காந்திகிராமம் கஸ்துாரிபா மருத்துவமனையில் ஊழியர்களுக்கான புத்துணர்வு கருத்தரங்கு நடந்தது. டாக்டர் காந்திமதிநாதன் தலைமைவகித்தார்.செவிலிய கண்காணிப்பாளர் சோபியாபிளாரன்ஸ் வரவேற்றார். அறக்கட்டளை இணை செயல் அலுவலர் சிபு சங்கரன், நிதி ஆலோசகர் சிவசுப்பிரமணியம், மனித வள மேம்பாட்டு ஆலோசகர் சங்கர் பேசினர். சிறப்பான சேவை செய்த, ஓவியம், கட்டுரை, கோலப் போட்டிகளில் வென்ற ஊழியர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மனச் சோர்வு, மன அழுத்தத்தை குறைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மதுரை தோப்பூர் டாக்டர் சுதாமதி பரிசு வழங்கினார். மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.