மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் வெங்காய பூக்கள்
09-Sep-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதிக்கு மூன்று நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள் சேவையினை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 245 நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மண்டலத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 8 ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதிக்கு 3 ஊர்தி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊர்தியிலும் கால்நடை உதவி மருத்துவர், ஊர்தி ஓட்டுநர் ,உதவியாளர் இருப்பர். இவற்றின் சேவைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி கலந்து கொண்டார்.
09-Sep-2024