உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தரையிறங்கிய மேக கூட்டம்; கொடையில் ரம்யமான சூழல்

தரையிறங்கிய மேக கூட்டம்; கொடையில் ரம்யமான சூழல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று பனிமூட்டத்துடன் இதமான சூழல் நிலவியது. வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அவதிப்படும் பொதுமக்கள் குளு குளு பகுதியில் தஞ்சமடைகின்றனர். இதில் கொடைக்கானல் முதன்மை வகிக்கிறது. தற்போது இங்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் மாலையில் இதமான காற்றுடன் சில்லிடுகிறது. நேற்று காலை வழக்கம்போல வெயில் நீடித்த நிலையில் மதியத்திற்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் ஆங்காங்கே தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ