உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பஸ்சால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதி அடைந்தனர்.நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. கணவாய்பட்டி மேடு பகுதியை கடந்தபோது இன்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. ஓட்டுநர் நீண்ட நேரம் போராடியும் பஸ்சை இயக்க முடியவில்லை. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வெயிலில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். மாற்று பஸ்சும் ஏற்பாடு செய்யவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்து அவதி அடைந்த பயணிகள் குறித்த நேரத்திற்கு சொல்ல முடியவில்லை என புலம்பினர். பின்னர் அந்த வழியே வந்த வேறு பஸ்களில் ஏறி சென்றனர். நத்தம், சாணார்பட்டி, செந்துறை பகுதிகளில் இயங்கும் அரசு பஸ்கள் பழுதாகி அடிக்கடி நடுரோட்டில் நிற்பது தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்பதுடன் விபத்து அபாயமும் உள்ளதால் அரசு பஸ்களை முறையாக பராமரிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்