உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் துவங்கியது ஆடி மாத லட்சார்ச்சனை

பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் துவங்கியது ஆடி மாத லட்சார்ச்சனை

பழநி, : பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி முதல் நாளான நேற்று லட்சார்ச்சனை துவங்கியது.பழநி முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆடி முதல் நாளில் சாய்ரட்சை பூஜையில் லட்சார்ச்சனை துவங்கியது. இந்நிகழ்ச்சி ஆக. 10 வரை நடக்கிறது . ஜூலை 19 ல் பெரிய நாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ஜூலை 26 ல் மீனாட்சி அலங்காரம், ஆக. 2ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக 11-ல் ஆடி லட்சார்ச்சனை கேள்வி ,ஆக. 16 ல் தங்க கவச அலங்காரம் நடக்கிறது. இதன்பின் வெள்ளித்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறும்இது போல் பழநி கலையம்புத்துார் அக்ரஹாரம் ஸ்ரீ கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா நேற்று காலை துவங்கியது. ஆடி மாதம் முழுவதும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை