மேலும் செய்திகள்
ரோடு பள்ளத்தால் தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள்
19-Feb-2025
கேபிள் ஒயர்களால் விபத்து : திண்டுக்கல் ராம்நகரில் கேபிள் ஒயர் ஆங்காங்கே தொங்குவதால் விபத்துக்கு வழிவகுக்கிறது. ரோட்டில் குறுக்கேயும் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கின்றனர். ஒயர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.--பழனிச்சாமி, ராம்நகர்.மின்கம்பத்தில் நுாலாம்படை : திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் மேல் பகுதியில் முழுவதும் நுாலாம்படை பிடித்துள்ளது. இதனால் மின் விளக்கு வெளிச்சம் தெரியாமல் உள்ளது . கம்பத்தை சூழந்துள்ள நுாலாம்படையை அகற்ற வேண்டும்.-முருகேஷ், திண்டுக்கல்.சேதமான நீர் தேக்க தொட்டி : வடமதுரை வாலிசெட்டிபட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது. எப்போதும் விழும் நிலையில் நிலையில் உள்ளதால் இதன் அரகே செல்ல பலரும் அஞ்சுகின்றனர்.இதை சீரமைக்க வேண்டும்.-ராஜா, வடமதுரை.வயதானவர்கள் பாதிப்பு : வேம்பார்பட்டியில் இருந்து மொட்டையகவுண்டம்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதாவதுடன் சேதமான சாலையில் பயணிக்கும் வயதானவர்கள் பாதிக்கின்றனர்.-பானு, மொட்டையகவுண்டம்பட்டி.சாக்கடையில் குடிநீர் குழாய் : நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனுார் பேரூராட்சி பொம்மணம்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் குழாய் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது .குழாயை மாற்றி அமைக்க வேண்டும்.-க.ரதிஷ்பாண்டியன்,பொம்மணம்பட்டி.----------தெருவில் குப்பை குவியல் : திண்டுக்கல் என்.எஸ் .நகர் அருகே விநாயகர் நகர் தெருவில் குப்பை குவிந்துள்ளது. பிளாஸ்டிக் கலந்த குப்பை என்பதால் பாதிப்பு ஏற்படுகிறது .துர்நாற்றமும் வீசுகிறது. குப்பையும் பல நாட்களாக அப்படியே உள்ளது.இதனை அகற்ற வேண்டும்.-மாரிமுத்து, என்.எஸ்.நகர்.ரோட்டில் ஓடும் கழிவு நீர் : ஒட்டன்சத்திரம் நகராட்சி செக்போஸ்டில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டின் கிழக்குப் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டிலே செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் சாக்கடை அமைக்க வேண்டும்.-செந்தில், ஒட்டன்சத்திரம்.
19-Feb-2025