மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
23-Aug-2024
வீணாகும் குடிநீர்திண்டுக்கல் அருகே பெரிய பள்ளப்பட்டி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது .இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது .அதிக அளவில் வீணாகுவதால் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரி, பள்ளப்பட்டி................------தடுப்பு சுவர் போல் வேகத்தடைவேடசந்துார் - அழகாபுரி ரோட்டில் தமுத்துப்பட்டி அரசு துவக்கப்பள்ளி முன்பு தடுப்பு சுவர் கட்டியதைப் போல் வேகத்தடைகளை போட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர் .வேகத்தடையை அகற்ற நெடுஞ்சாலைத் துறை முன் வர வேண்டும். சுந்தரம், வேடசந்துார்.........------சேதமான மின்கம்பம்சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சி கல்லறை பக்கத்தில் மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயத்தை தடுக்க உடனடியாக அங்கு புதிய மின்கம்பத்தை நிறுவ மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேசன், மடூர்............------கேட் வால்வால் விபத்துசின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ரோட்டில் குடிநீர் குழாய் கேட் வால்வு திறந்த வெளியில் உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது . பாதசாரிகளும் தடுமாறி விழுகின்றனர் .முறையாக மூடி அமைக்க வேண்டும் மணிகண்டன், சின்னாளப்பட்டி..............-------புதர் மண்டிய சாக்கடைதிண்டுக்கல் 31வது வார்டு திருமலைசாமிபுரத்தில் சாக்கடையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி அப்படியே நிற்கிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது . சுத்தப்படுதத் நடவடிக்கை எடுக்க வேண்டும் வீரப்பன், திண்டுக்கல்.................-------குப்பையால் குமட்டல்திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாகியும் அள்ளாமல் உள்ளது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுற்றுசூழலும் பாதிக்கிறது . இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு பெரும் நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது .முருகன், திண்டுக்கல்.........-------கழிவுகள் தேக்கம்ரெட்டியார்சத்திரம் குட்டத்துப்பட்டியில் சாக்கடை சரிவர பராமரிப்பதில்லை. கழிவுகள் மேவிய நிலையில் அசுத்த நீர் நிரம்பி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் -வரை பாதிக்கின்றனர். சி.ஆறுமுகவேல், குட்டத்துப்பட்டி.................-----
23-Aug-2024