மதுபோதை: அரிவாள் வெட்டு
தாண்டிக்குடி,; மங்களம்கொம்பை சேர்ந்தவர்கள் காசிபாண்டி 41, சுரேஷ்குமார் 43. இருவரும் நண்பர்கள். மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கிடையே காசிபாண்டி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழும் நிலையில் சுரேஷ்குமார் அவரது மனைவி குறித்து தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் காசி பாண்டியை அரிவாளால் வெட்டியதில் காயமடைந்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.