| ADDED : ஏப் 04, 2024 11:45 PM
திண்டுக்கல் : தேர்தலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த பணிகளுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், நேர்முக உதவியாளர்கள் கோட்டைகுமார், ராஜேஸ்வரி உடனிருந்தனர்.1812 மையங்களுக்குத் தேவையான 1812 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1812 கட்டுப்பாட்டு இயந்திரம், 1812 உறுதி செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 358 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 358 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 539 உறுதி செய்யும் இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இப்பணி நிறைவுற்றதையடுத்து அந்தந்த தொகுதிக்குரிய இயந்திரங்களை சரிபார்த்து உரிய பாதுகாப்புடன் தலைமையிடத்திலிருந்து எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.