உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டுக்கு கவனிப்பு; அதிருப்தி

ஓட்டுக்கு கவனிப்பு; அதிருப்தி

வடமதுரை: வேடசந்துார் தாலுகாவில் இரு கூட்டணிகளின் சார்பில் 'ஓட்டுக்கு பணம்' என பணத்துடன் வீடு தேடி வரும் நபர்களால் நடுநிலை வாக்காளர்கள் வேதனையடையும் நிலை உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஓட்டுச்சீட்டு முறை ஓட்டு எண்ணிக்கைக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. செல்லாத ஓட்டுக்களும் பதிவாகின.ஓட்டுச்சாவடி வாரியாக ஓட்டுக்களை பிரித்து எண்ணும்போது இந்த பகுதியில் இந்த கட்சிக்கு அதிக ஓட்டு அல்லது குறைந்த ஓட்டு என தெளிவாக தெரிந்தது. இதனால் குறிப்பிட்ட பகுதியை அரசியல் பிரதிநிதிகள் புறக்கணிப்பது ,பழிவாங்குவது போன்ற பிரச்னையும் இருந்தது. இதனை தவிர்க்க 1996 தேர்தலில் முதன்முறையாக ஓட்டுக்களை பிரித்து பார்க்காமல் பல பூத் ஓட்டுக்களை மொத்தமாக எண்ணப்பட்டது.2001 முதல் மின்னணு இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்ததும் மீண்டும் பூத் வாரியாக யாருக்கு எவ்வளவு ஓட்டு என தெளிவாக தெரிகிறது. இந்த புள்ளி விபரங்களை வாங்கி வைக்கும் நிர்வாகிகள் அடுத்த தேர்தலில் ஓட்டுக்களை அதிகரிக்க பணம், அன்பளிப்பு வழங்குதல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றனர். பணம் தரும் ஒரு கட்சி வெல்லும்போது இதனால் தான் அந்த கட்சி வென்றதோ என பிற கட்சிகளும் பணம் தருவது தேர்தல் பணிகளில் ஒன்றாக்கிவிட்டன .கரூர் தொகுதிக்குட்பட்ட வேடசந்துார் சட்டசபை தொகுதியில் காங், -அ.தி.மு.க., வேட்பாளர்களுக்காக கட்சி ,கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் 'பட்டுவாடா' செய்கின்றனர்.இப்பகுதியில் போட்டா போட்டியாக பணம் தந்து ஓட்டை வாங்க நினைக்கும் செயல்பாட்டை கண்டு நடுநிலை வாக்காளர்கள் வேதனையடைகின்றனர்.வீடு தேடி வந்து மூன்று கட்சியினரும் பணம் தரும்போது வேண்டாம் என்றால் பின்னாளில் அரசியல்ரீதியான மன வருத்தங்களை ஏற்படுத்தும் என எண்ணி யாரும் மறுப்பதில்லை. சிலர் பெற்ற பணத்தை அவரவர் வழிபாட்டு தலங்களில் இருக்கும் உண்டியல்களில் சேர்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை