| ADDED : ஏப் 24, 2024 12:27 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.9ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஏப்.11ல் கொடியேற்றம், ஏப்.12 பூச்சொரிதல் என 15 நாட்கள் விழாவாக நடந்தது. நேற்று ஏப்.23ல் அம்மன் தெப்ப உற்ஸவ நிகழ்ச்சி கோட்டைகுளத்தில் நடந்தது. அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காளி வேடமணிந்தும், பக்தர்கள் அம்மனை வணங்கினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம், முளைப்பாரி ஊர்வலம், வில்லிசை நிகழ்ச்சி, பொங்கல், மாவிளக்கு வைத்தல், பூக்குழி இறங்குதல் உட்பட நேர்த்திகடன் நிகழ்ச்சிகள் நடந்தன. நிர்வாக தலைவர் பாண்டி விழா ஏற்பாடுகள் செய்தார்.