உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பி.கொசவபட்டி கோயில் கும்பாபிஷேகம்

பி.கொசவபட்டி கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் : வடமதுரை அருகே பி.கொசவபட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன்,பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதையொட்டி திருச்செந்துார், ராமேஸ்வரம், அழகர் கோயில், வைகை, காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் , முளைப்பாரி ஊர்வலமாக கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மங்கள இசையுடன் மஹா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி. திக்பந்தனம் மிருச்சங்கிரணம், அங்குரார்பணம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடந்தது.யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க கடன் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கருடர்கள் வானத்தில் வட்டமிட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை