புதர்மண்டிய வனக் குடியிருப்பு
தாண்டிக்குடி : கன்னிவாடி வனப்பகுதியான குப்பம்மாள்பட்டியில் வனப்பகுதியை கண்காணிக்க குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதலே வனத்துறையினர் தங்காத நிலையில் புதர்மண்டி உள்ளது. பயன்பாடற்ற கட்டடத்தில் உள்ள கதவு, ஜன்னல் பயன்பாட்டுக்கு முன் சேதமடைந்தது. எலக்ட்ரிக்கல் பணி செய்யப்பட்டு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இங்கு பாம்பு, விஷ ஜந்துக்கள் நடமாட்ட பகுதியாக உள்ளது. மாவட்ட வனத்துறை வனக்காவலர் குடியிருப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.