உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பளியர் பழங்குடியின மக்களுக்கு முகாம்

பளியர் பழங்குடியின மக்களுக்கு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் பழநி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின பளியர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாதி சான்றிதழ், ஆதார் திருத்தம், குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவ வசதி, பட்டா வழங்குதல், வீடு கட்டுதல், குடிநீர், கழிப்பறை, வங்கி கணக்கு தொடங்குதல், வங்கி மூலமாக கடன் வசதி போன்றவை செய்து தருவதற்கான முகாம்களை அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று நடத்துவது குறித்து அனைத்து துறைகளை ஒன்றிணைத்து கூட்டம் நடந்தது. கலெக்டர் பூங்கொடி பேசியதாவது,பழங்குடியின பளியர் இன மக்களுக்கு நடத்தப்படும் முகாம் பெயரளவில் இல்லாமல் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப வாரிய தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சாதி சான்றிதழ், பட்டா போன்றவை இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய தேவையான கணினிகள் உட்பட அதற்கு தேவையான உபகரணங்கள் முகாமில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ