உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டுப்படுத்தலாமே : மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்: உள்ளாட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்

கட்டுப்படுத்தலாமே : மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்: உள்ளாட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்

மாவட்டம் முழுவதும் நகரின் முக்கிய பகுதிகளில் கண் பார்க்கும் இடங்களிலெல்லாம் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதன் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. உள்ளாட்சிகள் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மட்டும் தான் செய்கின்றனர். அந்த பணியும் தற்போது நடக்காமல் தொய்வாக உள்ளது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில்வே ஸ்டேஷன்,பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் ஹாயாக படுத்து ஓய்வெடுக்கின்றன. சில நேரங்களில் அங்கு வரும் பயணிகளை கடிக்கவும் செய்கின்றன. இதனால் மக்கள் எந்நேரமும் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. இதோடு மட்டுமில்லாமல் நாய்களை வளர்ப்பவர்கள் தாங்கள் வெளியூருக்கு செல்லும்போது நாய்களை காப்பகத்தில் ஒப்படைக்காமல் அப்படியே தெருக்களில் விட்டு செல்கின்றனர். இதனால் உணவு கிடைக்காமல் நாய்கள் ரோட்டில் செல்லும் மக்களை கோபத்தில் கடிக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லாமலிருப்பதால் எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டமாக கூட்டமாக பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றித்திரிகின்றன. இரவில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளையும் துரத்துகின்றன. தொடரும் இப்பிரச்னையை தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பு மக்களும் கோரிக்கை வைக்கின்றனர். அத்தி பூத்தது போல எப்போதாவது உள்ளாட்சிகள் நாய்களை பிடிக்க தீவிரமாக பணியாற்றுகின்றனர். அதன்பின் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். இப்படி இருந்தால் என்ன செய்வது என பொது மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை மீது தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை