| ADDED : ஆக 13, 2024 05:51 AM
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி சிறுமலை சின்னக்கடை வெள்ளையம்மாள் சுவாமி, நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் திருச்செந்துார், ராமேஸ்வரம், அழகர் கோயில், வைகை, காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள்,முளைப்பாரி ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது.நேற்று காலை மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடன்கள் வானத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.