| ADDED : மே 24, 2024 03:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி, புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள ஜெ.கே.ஆர். கராத்தே பயிலகத்தில் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன் தலைமையில் நடந்தது. பட்டேல் ஹாக்கி அகாடமி சங்க தலைவர் ரமேஷ் பட்டேல், மாவட்ட கைப்பந்து செயலாளர் ராஜசேகர், மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம், வள்ளிநாயகி கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், தேசிய கால்பந்துசங்க நிறுவனர் டைட்டஸ், மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் உதவி செயலாளர் சேசுராஜ், புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் ஜான் ஆரோக்கியம், கரூர் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பங்கேற்றனர். விளையாட்டில் சாதித்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கவுரவிக்க பட்டனர். யோகா ஆசிரியர்கள் ராஜகோபால், நித்தியா ஏற்பாடு செய்தனர். பட்டேல் ஹாக்கி அகாடமி செயலாளர் ஞானகுரு நன்றி கூறினார்.