உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாங்கு சுவர் சீரமைக்கும் பணி துவக்கம்

தாங்கு சுவர் சீரமைக்கும் பணி துவக்கம்

தாண்டிக்குடி: தினமலர் செய்தி எதிரொலியாக தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் தாங்குசுவர் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த ரோட்டில் தடியன்குடிசை கானல் காடு இடையே கனமழையின் போது கான்கிரீட் தாங்குசுவர் சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது.இது குறித்து சில வாரங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை அமைத்து புதிதாக தாங்கு சுவர் கட்டமைக்கும் பணியை துவங்கி உள்ளனர். இந்த ரோட்டில் பல்வேறு இடங்களில் தாங்குசுவர் சேதமடைந்துள்ளதையும் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை