உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

காங்., மன்னிப்பு கேட்க வேண்டும் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி

திண்டுக்கல்:''மக்களிடம் காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்'' என பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: காங்., கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களை பிளவுபடுத்தும் வகையில் நிறங்கள் குறித்த கருத்தை கூறியிருக்கிறார். காங்., கட்சியின் முக்கிய ஆலோசகராக அவர் இருக்கிறார். தற்போது ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறுகின்றனர். எனவே அதை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று காங்., ஒதுக்கிவிட முடியாது. இந்தியர்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் முயற்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காங்., கட்சியும் ராகுலும் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை