உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீரோடைகளில் கலக்கும் காட்டேஜ் கழிவு: வீணாகிறது விளைநிலங்கள்

நீரோடைகளில் கலக்கும் காட்டேஜ் கழிவு: வீணாகிறது விளைநிலங்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நீரோடைகளில் கலக்கும் காட்டேஜ்களின் கழிவுகளால் விவசாய நிலங்கள் முழுவதும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் சிறுமலை உள்ளது. இங்கிருக்கும் சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதற்காக வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். ஒருசிலர் இங்கு விடுமுறையில் தங்கி பொழுதுபோக்குகின்றனர். பயணிகள் தங்க தனியார் சார்பில் வனப்பகுதிகளுக்குள் அனுமதியை மீறி பல காட்டேஜ்கள் உருவெடுத்துள்ளது. காட்டேஜ் கழிப்பறை , சமையல் கழிவுநீரை பைப்கள் மூலம் அருகிலிருக்கும் நீரோடைகளில் கலந்து விடுகின்றனர். அந்த ஓடை நீரை விலங்குகள் குடிப்பதால் நோய் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர சிறு,குறு விவசாயிகள் இந்நீரை நம்பி தான் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அக்கழிவுநீரை விவசாய நிலத்திற்குள் பாய்ச்சும் போது நிலம் பாழாகிறது. பயிர்களும் வாடும் நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக பலரும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதுபோன்ற நிலையால் சிறுமலையின் இயற்கை வளங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி