உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக்: ஏஞ்சல் காஸ்டர் அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: ஏஞ்சல் காஸ்டர் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக்- டி.டி.சி.ஏ. கிரிக்கெட் லீக் 4வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் ஏஞ்சல் காஸ்டர் சி.சி. அணி வென்றது.திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக்- டி.டி.சி.ஏ. கிரிக்கெட் லீக் 4வது டிவிஷன் லீக் போட்டி ஆர்.வி.எஸ். கல்லுாரியில் நடந்தது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக் போட்டியில் காந்திகிராம் ஜி.ஆர்.ஐ., சி.சி. அணி 29 ஓவரில் 162 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. பிரதீப்குமார் 31, சபரேஷ்வரன் 48, விக்னேஷ் 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சி.சி. அணி 30.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 163ரன்கள் எடுத்து வென்றது. முகமது பஹீம் 65, கார்த்திகேய குமரன் 45(நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். ஆர்.வி.எஸ். கல்லுாரியில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் லீக் போட்டியில் கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சி.சி. அணி 40 ஓவரில் 228 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ஆதிசிவன் 25, சச்சின் 62, ஷேக்அப்துல்லா 25, முகமது 41, கோபி 34ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா சி.சி. அணி 37 ஓவரில் 9 விக்கெட் இழந்து 229ரன்கள் எடுத்து வென்றது. அரவிந்த் 52, முனீஜ் குருசரன் 73 (நாட்அவுட்)ரன்கள், முகமது 3 விக்கெட் எடுத்தனர். ஸ்ரீ.வீ.கல்லுாரியில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் திண்டுக்கல் வெற்றி சி.சி. அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 173ரன்கள் எடுத்தது. புகழேந்திரன் 37, கார்த்திக் 43ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சி.சி. அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 147ரன்கள் எடுத்தது. அருண்நிஷாந்த் 38ரன்கள் எடுத்தார். ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த ஹோட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் கொடைக்கானல் லெவன் அணி 20 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஜெரால்டு ஜோசப் 34ரன்கள், திலிப்குமார், பாலமணிகண்டன் தலா 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஸ்கை சி.சி. அணி 21.3 ஓவரில் 9 விக்கெட் இழந்து 105ரன்கள் எடுத்து வென்றது. ரூபன் ராஜ் 5, நவீன் 3 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. கல்லுாரியில் நடந்த 4வது டிவிஷன் லீக் போட்டியில் கொடைக்கானல் லெவன் அணி 19.2 ஓவரில் 84 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. செல்வேந்திரன் வேலுமணி 46, ஸ்டீபன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஏஞ்சல் காஸ்டர் சி.சி. அணி 5.5 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 90ரன்கள் எடுத்து வென்றது. வீரா 33, ஹரிஷ்பாபு 40 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை