உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை காட்டேஜ்களில் பாரபட்ச சோதனை; அதிருப்தி

கொடை காட்டேஜ்களில் பாரபட்ச சோதனை; அதிருப்தி

கொடைக்கானல் : கொடைக்கானல் நகர்,கிராம பகுதிகளில் செயல்படும் அனுமதியற்ற காட்டேஜ்களில் அதிகாரிகள் நடத்தும் சோதனை பாரபட்சமாக உள்ளதாக அதிருப்தி நிலவுகிறது.கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் ஹோம்ஸ்டே, காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இவைகளில் 5 ஆயிரத் திற்கு மேற்பட்ட காட்டேஜ்கள் அனுமதி இன்றி செயல்படும் நிலையில் இரு வாரமாக வருவாய்த்துறை தலைமையில் அனைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர். அதன்படி வட்டக்கானலில் 3 காட்டேஜ்களுக்கு சீல் வைத்தனர். அங்கு சட்ட விரோதமாக இருந்த கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கைப்பற்றினர். நேற்று முன்தினம் கூக்கால், பூம்பாறை பகுதி காட்டேஜ்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இங்கு அனுமதியின்றி செயல்பட்ட டூம் ஹவுஸ், ஆசிரமம் உள்ளிட்ட இரண்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் பாரபட்சம் இன்றி அனைத்து காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளின் மீது நடவடிக்கை எடுக்காது குறிப்பிட்ட சில விடுதிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் பல்வேறு சந்தேங்களை எழுப்பி உள்ளது. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட காட்டேஜ்கள் அனுமதியின்றி செயல்படும் நிலையை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் ஒரு சில காட்டேஜ்களில் மட்டும் சோதனை செய்வது கேள்விக்குறியாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் செயல்படும் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஹோம்ஸ்டே உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் தனிக் குழுவை நியமித்து விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்து ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ