கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், 'தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷன், தி மெட்ராஸ் கெனைன் கிளப், தி சேலம் அக்மி கென்னல் கிளப்' சார்பில் இரண்டு நாட்களாக நடந்த நாய் கண்காட்சியில் நாடு முழுதுமிருந்து, 424 நாய்கள் பங்கேற்றன. பாக்சர், டோபர்மேன், கிரேடன், செர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியான் புல்டாக், பக், டாக்சன்ட், பிகில், ஆப்கான் கவுண்ட், டாய் பொமோரியன், கோல்டன் ரெட்ரீவர், சிப்பிபாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய்கள் பங்கேற்றன.பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கான தேர்வுகள் நடந்தன. முதல் நாள் கண்காட்சியில், சென்னையை சேர்ந்த தர்ஷாவின் சுர்ரோ சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டு, கோப்பை வழங்கப்பட்டது.இரண்டாம் நாள் கண்காட்சியில் கொடைக்கானல் கிளப்பில், பெஸ்ட் இன் ஷோ பிரிவில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூபேந்திர சிங்கின் டாபர்மேன், பெஸ்ட் பப்பி பிரிவில் மதன்ராஜ் அவினஷ் கேவியின் டாபர் மேன், சிறந்த இந்திய வகைகளில் குண்டயப்பா நவாவியின் முதில் கவுண்ட்ம், மெட்ராஸ் கிளப் பெஸ்ட் இன் ஷோவில் கோல்கட்டாவைச் சேர்ந்த நித்யா படிங்காரின் கெவிலியர் கிங்சால் பேனியல்.பெஸ்ட் பப்பி பிரிவில் ஹரீசா கேபியின் பீகில், சிறந்த இந்திய வகைகளில் சென்னையைச் சேர்ந்த பாலமுருகனின் ராஜபாளையம் நாய், சேலம் அக்மி கென்னல் கிளப் பெஸ்ட் இன் ேஷா பிரிவில் ஒடிசாவைச் சேர்ந்த சித்தார்த்தின் ஆஸ்திரேலியன் செப்பர்டு, சிறந்த இந்திய வகையில் கோவையைச் சேர்ந்த வெற்றி செல்வனின் ராஜபாளையம் நாய் ஆகியவை தேர்வாகின.நேற்று நடந்த இறுதி போட்டி தேர்வின் போது மூன்று மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால், செல்லப் பிராணிகளை வைத்திருந்தவர்கள் அவதிக்குள்ளாகினர்.