உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகள் 

அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகள் 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன.இதில் அம்ரூத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நிலக்கோட்டை, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில் புதிய குடிநீர் குழாய்கள், மேல்நிலைத் தொட்டிகள், தொட்டிகள் அமைக்க கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நிலக்கோட்டை பேரூராட்சியில் ரூ.37.16 கோடி மதிப்பிலும் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் ரூ.16 கோடி மதிப்பிலும் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. நடப்பாண்டில் வத்தலகுண்டு பேரூராட்சியில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.35.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அம்ரூத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 3 பேரூராட்சிகளிலும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக புதிய குழாய்கள் பொருத்தும் பணி நடக்கிறது. நிலக்கோட்டை, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில் இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வத்தலகுண்டு பேரூராட்சியில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை