உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

பழநி: பழநி ப்ரெண்ட்ஸ் அரிமா சங்கம் சார்பில் சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வயது முதிர்ந்தவர்களுக்கான கண் பரிசோதனை, கண் விழித்திரை பரிசோதனை நடைபெற்றன. இலவச சக்கரை நோய் பரிசோதனையும் நடந்தது. முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சலுகை கட்டணத்தில் லேசர் சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. மலைக்கோயில் அரிமா சங்க பட்டய தலைவர் வெங்கடாஜலபதி, நெய்க்காரப்பட்டி அரிமா சங்க சுப்புராஜ், டாக்டர் விமல் குமார், டாக்டர் கார்த்திக், டாக்டர் முகேஷ் குமார், பழநி ப்ரண்ட்ஸ் அரிபா சங்கத் தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை