உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்

பழநி : பழநி சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அதிகளவில் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. வனத்துறை நிர்வாகம் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களில் தென்னை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதம் செய்கிறது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இரவில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் வருவதால் விவசாயிகளை அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர். சில நாட்களாக பழநி அருகே வரதமாநதி அணை, கோம்பைப்பட்டி, ஆயக்குடி, பாலாறு பொருந்தலாறு அணை பகுதிகளில் யானை நடப்பட்டம் உள்ளது. வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை