| ADDED : ஆக 12, 2024 04:29 AM
கன்னிவாடி : திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒலி பெருக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களில் குறிப்பிட்ட அளவு டெசிபல் ஒலி எழுப்பும் பாக்ஸ் ரக ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் கோயில் விழாக்கள் பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அரசு விழாக்களிலும் இவற்றின் கட்டுப்பாடற்ற பயன்பாடு தாராளமாக பெருகி வருகிறது. அளவிற்கு மீறிய சத்தத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் பாடல்கள் போடப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை தவிர, பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் இவற்றின் உபயோகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இவற்றின் பயன்பாடு மூலம் காது கேளாமை, விபத்துக்கள், இதய நோய் பாதிப்புடையோரை அவதிக்குள்ளாக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இப்பிரச்னை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலர் புகாரளிக்கின்றனர். இருப்பினும் இதனை செயல்படுத்துவதில் போலீஸ், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் அரசியல், செல்வாக்கு, கவனிப்பு போன்றவற்றால் அலட்சியமாக உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடுத்து நிறுத்துங்கஅதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்பாடு தாராளமாக உள்ளது. பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட, இடங்களில் இவற்றை பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் கட்டுப்பாடின்றி இவற்றில் ஒலி எழுப்புகின்றனர். இதனால் ஒலி மாசு ஏற்படுகிறது. தொடரும் இப்பிரச்னையால் மாவட்டத்தில் பரவலாக மன அழுத்தம், ரத்த அழுத்தம், துாக்கமின்மை, இதய நோய்கள் பாதிப்பிற்கு உள்ளாவோர் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தீர்வு காணும் வகையில் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.-* சந்துரு,ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி, கன்னிவாடி...............................