ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை முயற்சி
எரியோடு: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மாரம்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருள் பாஸ்கி 37. இவரது மனைவி வீணா ஜோஸி 33. இவர் குடும்ப தகராறில் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை தன் வீட்டிற்கு அழைத்தும் வராததால் மன உளைச்சலில் இருந்த அருள் பாஸ்கி மகள் ரெக்ஸியா 13, மகன்கள் மரியரெண்டி 11, மரிய ரெக்ஸ் 9 ,ஆகியோருக்கு நேற்று முன்தினம் இரவு பரோட்டாவில் விஷ விதையை அரைத்து கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். அருகில் வசித்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற நால்வரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.போலீசார் கூறுகையில்' 4 பேரும் உடல் நலம் தேறி உள்ளனர். உயிருக்கு ஆபத்து இல்லை' என்றனர்.