உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காங்கேயன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

காங்கேயன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி, : சாணார்பட்டி நொச்சியோடைப்பட்டி காங்கேயன் சாமி, வடபத்ரகாளியம்மன், கருப்புசாமி, மதுரை வீரன், பெரிய ஆண்டவர், சின்ன ஆண்டவர், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம் முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து மகாபூர்ணாகுதி கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு தீபாராதனை நடந்தது. மேளதாளம் முழங்க பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை