உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.சில மாதங்களாக வறண்ட வானிலையுடன் குளு குளு நகரான கொடைக்கானலில் புழுக்கமாக இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சில தினங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்கிறது. தொடர்ந்து மேக கூட்டங்கள் தரை இறங்கிய நிலையில் ரம்யமான சூழல் நிலவியது. நேற்று மாலை 5:00 மணிக்கு பின் இடியுடன் 1 மணி நேரம் கனமழை பெய்தது. சாரல் மழையும் நீடித்தது. கனமழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள பாம்பார்புரம், வெள்ளி நீர்வீழ்ச்சி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

' கொடை'யில் பிரம்ம கமலம் பூ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பிரம்ம கமல பூ பூத்துள்ளது. ஓராண்டிற்கு முன் பூங்காவில் பிரம்ம கமல பூ செடி நடவு செய்யப்பட்டது. தற்போது அவை நன்கு வளர்ந்துள்ள நிலையில் வெள்ளை நிற பிரம்ம கமல பூக்கள் சில தினங்களாக நாள்தோறும் இரவில் மலர்ந்து பகலில் சுருங்கி விடுகிறது. மேலும் மணம் வீசும் இப்பூக்களை சுற்றுலா பயணிகள் பிரம்மிப்புடன் பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி