வைகையில் குவாரி கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
நிலக்கோட்டை: கோட்டைச்சாமி என்பவர் 2012 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம், விளாம்பட்டி வைகை ஆற்றுப் படுகையின் குறிப்பிட்ட சர்வே எண்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. தடுக்க, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மனுதாரர் தற்போது உயிருடன் இல்லை. சட்டவிரோதமாக குவாரிகள் நடந்துள்ளன. மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. குறிப்பிட இடத்தில், இனி வரும் காலங்களில் எந்த குவாரியும் நடைபெறக்கூடாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.