உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நத்தம் : நத்தம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் சிரங்காட்டு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று 2ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்ட புனித தீர்த்தக்குடங்கள் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு, கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை