மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
6 hour(s) ago
ஹாக்கி போட்டி
6 hour(s) ago
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
6 hour(s) ago
கோயிலுக்கு சரக்கு வாகனம்
6 hour(s) ago
சாதித்த பி.வி.பி., பள்ளி மாணவர்
6 hour(s) ago
சாணார்பட்டி : -சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி குமாரபாளையத்தில் செல்வவிநாயகர், மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன், கருப்பணசுவாமி, முனியப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.முன்னதாக நேற்று முன்தினம் மங்கள வாத்தியம்முழங்க தீர்த்தம் , முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது. பின்னர் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, முயற்கால யாக வேள்வி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.நேற்று காலை விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக வேள்வி, வேத பாராயணம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு புனித நீர் குடங்கள் புறப்பாடுடன் வேத மந்திரங்கள் முழங்ககோபுர கலசங்களில் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் மூலவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்த மகா தீபாராதனைகள் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை பிரசன்ன வெங்கடேஷ் ஐயர் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கற்பகம் கன்ஸ்ட்ரக் ஷன் சிங்கராஜ் ,அரவிந்த் செய்திருந்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago