உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாகல் நகர் வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிேஷகம்

நாகல் நகர் வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிேஷகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர் ஜெயவல்லி, விஜயவல்லி சமேத வரதராஜ பெருமாள் கோயில் ,பரிவார தெய்வங்களுக்கும் நாளை (ஜூலை 12) -கும்பாபிேஷகம் நடக்கிறது.திண்டுக்கல் நாகல் நகரில் ஜெயவல்லி, விஜயவல்லி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இதன் வளாகத்தில் சக்கரத்தாழ்வார், சித்தி விநாயகர், பாலமுருகன், விஷ்ணு துர்கை அம்மன், ராமர், ஆஞ்சநேயர், சங்கிலி கருப்பசுவாமி ,நவகிரகங்களின் சன்னிதிகளும் உள்ளன. கோயிலின் திருப்பணிகள் முடிந்துள்ள நிலையில் நாளை கும்பாபிேஷக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்தி திருமஞ்சன திருவாராதனம் நடந்தது. 11 :00 மணிக்கு விமானங்களில் கலச ஸ்துாபி பிரதிஷ்டை நடந்தது. இன்று ேஹாமம், இரவு 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு 3ம் கால ேஹாமத்துடன் தொடங்கும் விழாவில் 9:00 மணிக்கு வரதராஜ பெருமாள் , பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்ற கும்பாபிேஷகம் நடக்கிறது.இதை தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.மாலையில் பெருமாள் விதி உலா வர பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை